Tuesday, November 11, 2014

  • November 11, 2014
  • askshrinivas
தித்திக்கும் மாம்பழத்தின் நன்மைகள்


கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா? பலர் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.
உண்மையில் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் தணியத் தான் செய்யும். அதுமட்டுமின்றி, மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் பலர் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால், எங்கு அதில் உள்ள இனிப்புச் சுவையால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடுமோ என்று தான். ஆனால் அதுவும் பொய் தான். மாம்பழம் இதய நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பட்டுத்தும் தன்மை கொண்டது. சரி, இப்போது அத்தகைய மாம்பழத்தின் நன்மைகள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாம்பழத்தை ரசித்து சாப்பிடுங்கள்
புற்றுநோய்
மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.
கண்கள்
மாம்பழத்தில் வைட்டமின் அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.
கொலஸ்ட்ரால்
மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
நீரிழிவு
மாம்பழம் என்ன தான் இனிப்பாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
முகப்பரு
மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
பாலுணர்வு
பொதுவாக வைட்டமின் காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும். இத்தகைய வைட்டமின் , மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது, ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு
சக்தி மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.
ஆரோக்கிய இதயம்

மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.

Popular Posts

Blog Archive

Followers