Monday, November 10, 2014

  • November 10, 2014
  • askshrinivas

கொத்தமல்லிக்கீரையின் மருத்துவக்குணங்கள்


கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.

இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்ததுஇக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.

இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.

கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.

பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

Related Posts:

  • மருந்தில்லா மருத்துவம் மருந்தில்லா மருத்துவம் தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.  … Read More
  • சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! ! சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: வரக்கொத்தமல்லி --அரை கிலோ வெந்தயம் --… Read More
  • மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் *அருகம்புல் பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது *கடுக்காய் பொடி:- குடல… Read More
  • இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம் இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம் இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்து… Read More
  • குடல் புண் பிரச்சனையா…? வாயுக்கோளாறா..? குடல் புண் பிரச்சனையா…? வாயுக்கோளாறா..? இதோ இயற்கை தரும் மருந்து..! இயற்கை நமக்கு கொடுத்துள்ள உணவுகளால் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். இதோ சில இயற்கையான உணவுகளின் பலன்கள். தேன்:  சக்தியை கொடுக்க… Read More

Popular Posts

Blog Archive

Followers