Monday, April 22, 2019

  • April 22, 2019
  • askshrinivas
வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்.

"அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை வாழ்கையே அஸ்தமனமாகிவிடும். ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும். வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். 

மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள் ஹேமா.

எந்தக் குறையுமில்லை – மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர.

சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத்தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு.

எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும்
கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு???? வழக்கம்போல்தான் --- கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்.......

பிறகு ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள். அவள் முகத்தில் சிரிப்பு இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.

“சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா?” என்று கேட்டார் சித்த வைத்தியர் .

“சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் ” என்றாள்.

“காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா” என்றார்.

“ப் பூ .... இவ்வளவுதானா? ” என்றாள்.

“நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு” என்றார்.

“பத்தியம் ஏதேனும் உண்டா?” என்றாள்

“சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது ” என்றார்.

சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.

“உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா ” என்றாள்.

“இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? ” என்றேன்.

அதற்கு “போட்டோக்களும் தருகிறேன் மாமா” என்றாள்.

”எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள்” என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக.

திருமதி. ஹேமா உமாசங்கர்
கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை) 

Related Posts:

  • பற்கள் பளீச் தோற்றம் பெற பற்கள் பளீச் தோற்றம் பெற சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்… Read More
  • Skin Care Tips Skin Care Tips Problem: dull and fatigued complexionRemedy: Mash banana with milk and apply it on face. Leave it for 20 minutes and rinse with cold water.Problem: Sensitive SkinRemedy: Make a paste of tu… Read More
  • நெல்லிக்காய் மோர் நெல்லிக்காய் மோர் நெல்லிக்காய் – 4  மோர் – ஒரு கப்  உப்பு, பெருங்காயம் – தேவையான அளவு. செய்முறை: நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவு… Read More
  • பூ‌ண்டு பூ‌ண்டு வெறு‌ம் சமைய‌ல் பொரு‌ள் அ‌‌ல்ல நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.பூண்டை வறுத்… Read More
  • Hair Care Tips Hair Care Tips Problem: Dull Hair Remedy: Apply a puree of cucumber for 15 minutes, and then wash off. The result is healthy shining hair that's full of bounce too. Problem: Oily hair Remedy: Wash frequently w… Read More

Popular Posts

Followers