Thursday, March 10, 2016

  • March 10, 2016
  • askshrinivas
முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு! இயற்கை தரும் இளமை !!!

அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச் சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் ‘ப்ளீச்’ செய்ததுபோல் பளிச்சென்று பிரகாசிக்கும்.


ஜுரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்குகிறது எலுமிச்சை.

2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலை விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் கழுவுங்கள். கருவளையத்தைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் இந்த சிகிச்சைக்கு உண்டு.

இளம் வயதிலேயே சிலருக்கு தோல் தொங்கி வயதான தோற்றத்தைத் தரும். இதற்கு அருமையான வைத்தியம் இருக்கிறது எலுமிச்சையில்.

தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு – அரை கப், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் – ஒரு டீஸ்பூன்.. இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

‘நேச்சுரல் ஃபேஸ் பேக்’ செய்யும் விதத்தைச் சொல்லட்டுமா?

எலுமிச்சை இலை – 4,
பயத்தம்பருப்பு,தயிர் – தலா ஒரு டீஸ்பூன்,
கஸ்தூரி மஞ்சள் – அரை டீஸ்பூன் (‘ஃபேஸ் பேக்’ போடுவது ஆணுக்கு எனில், கஸ்தூரி மஞ்சளுக்கு பதிலாக சந்தனத் தூள் – அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்), 

இவற்றை நன்றாக அரைத்தால் கிடைப்பதுதான் ‘நேச்சுரல் ஃபேஸ் பேக்’.
இதை முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்துக் கழுவினால், 
அன்று மலர்ந்த தாமரை போல் முகம் ஜொலி ஜொலிக்கும்.

கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் எலுமிச்சை!

2 எலுமிச்சம் பழங்களின் சாறில் 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வையுங்கள். இதனுடன் கொட்டை நீக்கிய புங்கங்காயைச் சேர்த்து அரையுங்கள். இந்த விழுதை வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பட்டுப் போல மென்மையாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

தலையில் எண்ணெய் தடவினால், தலை முடி பிசுபிசுத்து, முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இந்தப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு எலுமிச்சையில்!

ஒரு கை அளவு தேங்காய் எண்ணெயில் 2 துளி எலுமிச்சைச் சாறை குழைத்து தடவுங்கள். எண்ணெய் தேய்த்த தலை போலவே இருக்காது. கூந்தலும் பளபளப்படையும்.

பருக்களால் முக அழகே கெட்டு விடுகிறது என்று கவலைப்படுகிறீர்களா..?

4 துளசி, 4 வேப்பந்தளிர், கடலை மாவு – ஒரு டீஸ்பூனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவுங்கள். தோல் மிருதுவாகி, பருக்கள் மறையும். அடுத்து பருக்களே வராது. டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு அருமையான சிகிச்சை இது.

பற்களை பளிச்சிட வைக்கிறது எலுமிச்சைச் சாறு.

உப்புத்தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரைத்தூள் – ஒரு டீஸ்பூன், பொடித்த கற்பூரம் – கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 4 துளி, வேப்பந்தூள் – அரை டீஸ்பூன்.. இவற்றைக் கலந்து வாரம் 2 முறை பல் தேய்த்து வந்தால் ஈறு வலுவடைவ துடன் பற்களில் உள்ள காரையும் மறையும். இந்த பவுடரை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித் தால், வாய் துர்நாற்றமும் இருக்காது.

வியாதிகள் போக்கும் எலுமிச்சை

மலையேறும்போது போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் சிரமப்படுகிறவர்கள் கையோடு கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் கொண்டு போகலாம். எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சுவாசம் சீராகும்.

எலுமிச்சையில் 84.6% நீர்ச் சத்து இருக்கிறது. வெயில் கால தாகத்தைத் தணிக்க இது உதவுகிறது.

எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதால் மலேரியா, காலரா போன்ற நோயின் வீரியம் குறையும்.

முடக்குவாத நோயை சரி செய்யவும், எலும்பு தேய்மான பிரச்னை இருப்பவர்களின் நோய் தீவிரத்தைக் குறைக்கவும் எலுமிச்சையிலுள்ள ‘விட்டமின் சி’ சத்து உதவுகிறது.

எலுமிச்சைச் சாறை தண்ணீர் கலக்காமல் குடிக்கக் கூடாது. குடித்தால் பல் எனாமல் பாதிப்படையும்.

வாயில் எச்சில் ஊறுதல், நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வாய்க் கசப்பு உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட.. பூரண குணம் கிடைக்கும்.

பித்தம், வாய்க் கசப்பால் சாப்பாடு பிடிக்காமல் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை இலை பவுடரை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சட்டென்று நலம் பெறுவார்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். எலுமிச்சையில் தண்ணீர் சேர்த்துக் குடிப்பது தாகத்தைக் கட்டுப்படுத்தும்.
மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இந்துப்பு (மலை உப்பு) தூவி வாயில் அடக்கிக் கொண்டால்.. விரைவில் குணமடைவார்கள்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எலுமிச்சை ஜூஸ் கொடுத்தால் சோர்வில்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருப்பார்கள்.

பசும்பாலில் ஒரு துளி எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வர ரத்த மூல நோய் சரியாகும்.

Disclaimer: This website and all of its contents are for informational purposes only. Do not take anything here as medical advice. Always consult with your doctor first. You must read and agree to the disclaimer before you attempt to use any of the information here

Popular Posts

Blog Archive

Followers