Friday, March 4, 2016

  • March 04, 2016
  • askshrinivas
உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


Disclaimer: This website and all of its contents are for informational purposes only. Do not take anything here as medical advice. Always consult with your doctor first. You must read and agree to the disclaimer before you attempt to use any of the information here

Related Posts:

  • IMPROVE CALCIUM & HEMOGLOBIN IN WOMEN The normal level of hemoglobin in blood is 14-18 mg/dl for men & 12-16 mg/dl for women. Intake of Dates and Pomegranates Pomegranates are delicious. From kids to adults everyone enjoys them very m… Read More
  • மஞ்சள் பால்... மஞ்சள் பால்... *விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வர… Read More
  • இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்ட… Read More
  • Few Mandatory things We must remember before taking a car for Driving Driving Instructions Before Enter into the Car, Walk Around: Check Air level Fuel Leakage Check any Pet animals under the Car After Enter into the Car you should check 10 points: Insert the Key Press Clutch d… Read More
  • Relax ..... A Woman Knows.. Poem A Woman Knows... A woman dreams ... with her heart, dreams of passion,  beauty and peace on earth. A woman cries ... tears when she's wounded...replaced with smiles when she knows she will heal s… Read More

Popular Posts

Blog Archive

Followers