Friday, March 18, 2016

  • March 18, 2016
  • askshrinivas
மருந்தில்லா மருத்துவம்



  • தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும
  • சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும். 
  • கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது. 
  • வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும். 
  • தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும். 
  • அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும். 
  • சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும். 
  • அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும். 
  • கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது. 
  • மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும். 
  • நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும். 
  • நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும். 
  • மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும். 
  • கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும். 
  • முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும். 
  • உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும். 
  • எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது. 
  • குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும். 
  • இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது.

Related Posts:

  • தீராத இருமலைப் போக்கும் கைமருந்து தீராத இருமலைப் போக்கும் கைமருந்து இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புணகளுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் … Read More
  • !!! இயற்கை தரும் இளமை !!! முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு! இயற்கை தரும் இளமை !!! அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச் சாறு முகத்தில் உள்ள அ… Read More
  • குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உணவு முறைகள்:- குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உணவு முறைகள்:- பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை… Read More
  • எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவை… Read More
  • பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு ப… Read More

Popular Posts

Blog Archive

Followers