Tuesday, March 8, 2016

  • March 08, 2016
  • askshrinivas
தீராத இருமலைப் போக்கும் கைமருந்து

இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புணகளுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும். 


பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும்.

வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது. மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.

தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங் கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குறையும். அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள் யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம் வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும். துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.

வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு விலகும்.

Disclaimer: This website and all of its contents are for informational purposes only. Do not take anything here as medical advice. Always consult with your doctor first. You must read and agree to the disclaimer before you attempt to use any of the information here

Related Posts:

  • சிக்கன் பக்கோடா தேவையான பொருட்கள் :எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்பெரிய வெங்காயம் - ஒன்றுமஞ்சள் தூள் - சிறிதளவுஇஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்சாட் மசாலா - 1/4 ஸ்பூன்சீரக தூள் - 1/4 ஸ்பூன்கரம்மசாலா தூள் - 1/4 ஸ… Read More
  • ஆரஞ்சு பழத்தின் தோலில் நிறைந்துள்ள ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்! கடினமாகவும், கவனமாகவும் உருவாக்கப்பட்டதைப் போன்று தான் ஆரஞ்சுப் பழத்தின் தோல் இருக்கும். பல்வேறு மருத்துவ பலன்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதால், பழங்காலத்திலிருந்தே மிகுந்த மதிப்பைப் பெற்று வந்துள்ளது ஆரஞ்சுப் பழம். சாத… Read More
  • Natural Hair Conditioners Natural Hair Conditioners Here are some do-it-yourself hair conditioning treatments: Homemade hair mask:1. Egg mask: Courtesy, its high protein content, egg masks work best for damaged and dry hair.  &n… Read More
  • Apple Cider Vinegar for Warts Remedy - Get Results in Just 5 Days   ACV (Apple Cider Vinegar) is one of the best wart treatments ever in Home remedies, It’s simple, and many people have found success with it. It does not actually kill the virus, but because of its high acidity it … Read More
  • காரசாரமான...அசாரி கோஸ்ட் (மட்டன்) அசாரி கோஸ்ட் (மட்டன்) மழைக்காலம், குளிர்காலம் என்றால் காரசாரமான ரெசிபி எதாவது சாப்பிடணும் போல இருக்கும். அப்ப இந்த அசாரி கோஸ்ட் (மட்டன்) ரெசிபி ரொம்ப நல்லா இருக்கும். அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்… Read More

Popular Posts

Blog Archive

Followers