Saturday, December 20, 2014

  • December 20, 2014
  • askshrinivas
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - சிறிதளவு
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்

சாட் மசாலா - 1/4 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
கடலை மாவு - 5 ஸ்பூன்
கார்ன் ப்ளார் - 5 ஸ்பூன்
சோடா உப்பு - சிறிதளவு
கேசரி பவுடர் - சிறிதளவு
ஓமம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :
முதலில் எலும்பில்லாத சிக்கனை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும். பின் சிக்கனை மிக்ஸி அல்லது ஷாப்பரில் போட்டு கொத்துகறி போல் அரைத்து எடுத்து கொள்ளவும் (நைசாக அரைக்க வேண்டாம்). வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு அந்த சிக்கனுடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரக தூள், கரம்மசாலா தூள், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள், ஓமம், சோடா உப்பு, உப்பு, கேசரி பவுடர் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

தனியாக பிசைந்து ஊற வைத்துள்ள சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பின் சிக்கன் உருண்டையை மாவிற்குள் போட்டு முக்கி எடுக்காமல், கையை மாவில் நனைத்து, அந்த மாவை சிக்கன் உருண்டை மேல் தடவ வேண்டும். (சிக்கனை மாவிற்குள் போட்டு முக்கி எடுத்தால் சிக்கனை விட மாவு நிறைய இருப்பது போல் காணப்படும்.)

பிறகு அந்த சிக்கனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான சிக்கன் பக்கோடா ரெடி!!!

இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

Related Posts:

  • முதுமையிலும் இளமை வேண்டுமா? முதுமையிலும் இளமை வேண்டுமா? அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வ… Read More
  • வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உட… Read More
  • பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் * புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.* மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் * அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகி… Read More
  • ரோஜா “குல்கந்து” ரோஜா “குல்கந்து” ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதா… Read More
  • பனை பனை பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வ… Read More

Popular Posts

Followers