Saturday, December 13, 2014

  • December 13, 2014
  • askshrinivas
அசாரி கோஸ்ட் (மட்டன்)


மழைக்காலம், குளிர்காலம் என்றால் காரசாரமான ரெசிபி எதாவது சாப்பிடணும் போல இருக்கும். அப்ப இந்த அசாரி கோஸ்ட் (மட்டன்) ரெசிபி ரொம்ப நல்லா இருக்கும். அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

மட்டன் (1/2 இஞ்ச் எலும்புடன் கூடிய கறி) - 800 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
வரமிளகாய் - 8
கிராம்பு - 5
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு எண்ணெய் - 7 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் மட்டனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு வரமிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம், கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, பின் அவற்றை குளிர வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

3. பின் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெயை ஊற்றி, வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். பின் தக்காளி, இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

4. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள அந்த பொடியை போட்டு சிறிது நேரம் நன்கு கிளரவும்.

5. அடுத்து அதில் கழுவிய மட்டனை சேர்த்து நன்கு பிரட்டவும். பின் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளரவும். அதில் ஊற்றிய எண்ணெயும், மசாலாவும் தனியாக பிரியும் வரை பிரட்ட வேண்டும்.

6. பின் அதில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி, மூடி போட்டு மூடிவிட்டு அரைத் தீயில் வைத்து மட்டன் வேகும் வரை வேக விடவும்.

7. மட்டன் வெந்ததும், அதில் எலுமிச்சைப்பழச்சாற்றை விட்டு கிளரி இறக்கி விடவும்.

8. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை அதன் மேல் தூவி பரிமாறலாம்.
இதோ சுவையான, காரசாரமான அசாரி கோஸ்ட் ரெடி!!!

Related Posts:

  • இயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள் இயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள் 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் … Read More
  • பொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் !!!! பொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் !!!! 1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும் 2. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில்… Read More
  • புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!! புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!  புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும்,… Read More
  • பாட்டி வைத்தியம் பாட்டி வைத்தியம்:- * சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். * அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்… Read More
  • இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!!! சிறுநீரகக் கல்!!! இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!!! இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில்… Read More

Popular Posts

Followers