Thursday, September 4, 2014

  • September 04, 2014
  • askshrinivas


ஈறுகளின் ஆரோக்கியத்தை முறையாக பாதுகாக்காவிட்டால், பற்களானது வலுவிழந்து விரைவில் விழுந்துவிடும். பின் அழகான சிரிப்பை மறந்துவிட வேண்டியது தான். அதிலும் ஈறுகளில் பிரச்சனை இருந்தால், முதலில் ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையே இடைவெளி விழ ஆரம்பிக்கும். பின் அவற்றில் பாக்டீரியாக்கள் புகுந்து திசுக்களை அழிக்க ஆரம்பித்து, அவ்வப்போது ஈறுகளில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்துவிடும்.  அழகைக் கெடுக்குமாறு பற்களில் படியும் டீ கறைகளைப் போக்க சில டிப்ஸ்... இப்படி ஈறுகளின் ஆரோக்கியம் விரைவில் கெடுவதற்கு பல் பராமரிப்பு, பரம்பரை, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பல் துலக்கும் முறை போன்றவை காரணங்களாக இருக்கும். எனவே எப்போதும் ஆரோக்கியமான ஈறுகளையும், பளிச்சென்ற பற்களையும் பணத்தை அதிகம் செலவழித்து, பல் மருத்துவரிடம் செல்லாமல், வீட்டில் கிடைக்கும் ஒருசில எளிமையான இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், வெள்ளையான பற்களுடன், ஆரோக்கியமான ஈறுகளையும் பெறலாம். சரி, இப்போது ஈறுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைப் போக்க உதவும் ஒருசில இயற்கை வழிகளைப் பார்ப்போமா!!! பளிச்சிடும் வெண்மையான பற்கள் வேண்டுமா? 
இதோ சில சூப்பர் டிப்ஸ்...

க்ரீன் டீ 
 தினமும் காலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும்.

நல்லெண்ணெய்
 நல்லெண்ணெயிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் தினமும் காலையில் எழுந்ததும், வாயை நீரில் கொப்பளித்த பின்னர், நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 5-10 நிமிடம் கொப்பளித்து வந்தால், வாயில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி, இதனை அன்றாடம் பின்பற்றி வர,வாய் துர்நாற்றம் நீங்கும்.
கற்றாழை
கற்றாழையில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இதன் ஜெல்லைப் பயன்படுத்தி பற்களைத் துலக்குவது நல்லது. மேலும் கற்றாழை சாற்றினை உணவு உண்ட பின்னர் வாயில் ஊற்றி கொப்பளிப்பதும் மிகவும் நல்லது. இவை வாயில் ஏற்படும்  தொற்றுக்களைத் தடுக்கும்.

தேங்காய் எண்ணெய்
 தேங்காய் எண்ணெய் கூட வாயில் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும். அதற்கு தினமும் பல் துலக்கிய பின், சுத்தமான தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு கொப்பளிக்க வேண்டும்.
எலுமிச்சை எண்ணெய் 
எலுமிச்சை எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு வாரம் ஒருமுறை காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்தால் போதும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, பற்களில் கறைகள் இருந்தாலோ அல்லது ஈறுகளில் பிரச்சனைகள் இருந்தாலோ போய்விடும். மேலும் இந்த எண்ணெயானது பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கச் செய்யும்.

யூகலிப்டஸ் எண்ணெய்
இந்த நறுமணமிக்க எண்ணெய் கூட கிருமிகளை அழித்து, ஈறுகளில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும். மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருப்பதால், ஈறுகளில் வீக்கம் இருந்தால் குணமாகிவிடும். குறிப்பாக யூகலிப்டஸ் எண்ணெயை நீரில் கலந்து, வாயில் சிறிது விட்டு, விரல்களால் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ஈறுகளில் உள்ள பாதிப்படைந்த செல்களானது புதுப்பிக்கப்படும்
கிராம்பு
மற்ற பொருட்களையெல்லாம் விட, கிராம்பில் தான் எண்ணற்ற சத்துக்களானது உள்ளது. எனவே இந்த கிராம்பை தினமும் வாயில் போட்டு மென்றோ அல்லது கிராம்பு எண்ணெய் கொண்டு ஈறுகளை மசாஜ் செய்தோ வர வேண்டும். இதனால் வாயானது புத்துணர்வுடன் இருக்கும்.

Related Posts:

  • SARAL A Little About SARAL. For Info Please visit the Link SARAL. WHY WE ARE.? The age of Earth is 500 Crores of Years and the evaluation of earth is more than 1.8 Lakhs. The creatures and living are from the Nature and… Read More
  • IMPROVE CALCIUM & HEMOGLOBIN IN WOMEN The normal level of hemoglobin in blood is 14-18 mg/dl for men & 12-16 mg/dl for women. Intake of Dates and Pomegranates Pomegranates are delicious. From kids to adults everyone enjoys them very m… Read More
  • வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..! வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..! வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம். ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில்… Read More
  • Relax ..... A Woman Knows.. Poem A Woman Knows... A woman dreams ... with her heart, dreams of passion,  beauty and peace on earth. A woman cries ... tears when she's wounded...replaced with smiles when she knows she will heal s… Read More
  • Few Mandatory things We must remember before taking a car for Driving Driving Instructions Before Enter into the Car, Walk Around: Check Air level Fuel Leakage Check any Pet animals under the Car After Enter into the Car you should check 10 points: Insert the Key Press Clutch d… Read More

Popular Posts

Followers