Thursday, September 4, 2014

  • September 04, 2014
  • askshrinivas
நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி 



7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம்பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது” ! இது பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறைபழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி. இம்முறையை அமெரிக்காவின்Agriculture and Food and Drug Administrationஅங்கீகரித்துள்ளது. ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம் என்கிறார்கள் இம்முறையில் ! இந்த முறையில் ஐந்து நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்று அவர்கள் சொல்லும் லிஸ்டை பாருங்கள் :

முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக 

 இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம்.

 மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம் ( தவிர்க்க வேண்டியவை: வாழை பழம் மற்றும் உருளை கிழங்கு)

 நான்காம் நாள்: வாழை பழங்கள் + டம்ளர் பால் இரவு -வெஜிடபிள் சூப் குடிக்கலாம்  

ஐந்தாம் நாள் : காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். ஒரு பெரிய தக்காளி. இரவு: நான் வெஜ் : பீப் (மாட்டு கறி)ஒரு பெரிய தக்காளி. நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்  

ஆறாம் நாள்: காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். நிறைய காய்கறிகள் இரவு: நான் வெஜ் : ஒரு கப் சாதம். beef (மாட்டு கறி)  

ஏழாம் நாள்: நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் !

 ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் !

 எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் ! இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது.  

இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன் படும் இந்த முறை இல்லாமல் தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை: காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம் காலை உணவு: இட்லி ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும். காலை 11 மணிக்கு : ஒரு டம்ளர் மோர் மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம் நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும் இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும். இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் . “வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு எப்படி நாளை ஓட்ட முடியும் பசிக்காதா? “என கேட்கிறீர்களா? ஆனால் மிக அவசரமாக உடல் எடை குறைக்க விரும்பும் சிலர் இதில் முதலில் சொன்ன வழியை பின்பற்றி வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே !

Related Posts:

  • ஆரஞ்சு பழத்தின் தோலில் நிறைந்துள்ள ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்! கடினமாகவும், கவனமாகவும் உருவாக்கப்பட்டதைப் போன்று தான் ஆரஞ்சுப் பழத்தின் தோல் இருக்கும். பல்வேறு மருத்துவ பலன்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதால், பழங்காலத்திலிருந்தே மிகுந்த மதிப்பைப் பெற்று வந்துள்ளது ஆரஞ்சுப் பழம். சாத… Read More
  • Natural Hair Conditioners Natural Hair Conditioners Here are some do-it-yourself hair conditioning treatments: Homemade hair mask:1. Egg mask: Courtesy, its high protein content, egg masks work best for damaged and dry hair.  &n… Read More
  • காரசாரமான...அசாரி கோஸ்ட் (மட்டன்) அசாரி கோஸ்ட் (மட்டன்) மழைக்காலம், குளிர்காலம் என்றால் காரசாரமான ரெசிபி எதாவது சாப்பிடணும் போல இருக்கும். அப்ப இந்த அசாரி கோஸ்ட் (மட்டன்) ரெசிபி ரொம்ப நல்லா இருக்கும். அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்… Read More
  • சிக்கன் பக்கோடா தேவையான பொருட்கள் :எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்பெரிய வெங்காயம் - ஒன்றுமஞ்சள் தூள் - சிறிதளவுஇஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்சாட் மசாலா - 1/4 ஸ்பூன்சீரக தூள் - 1/4 ஸ்பூன்கரம்மசாலா தூள் - 1/4 ஸ… Read More
  • சுவையான நண்டு மசாலா நண்டு மசாலா இருமல், சளிக்கு நண்டை நல்லா காரமா வெச்சு சாப்பிட்டா நல்லா இருக்கும்-னு சொல்வாங்க. அந்த நண்டை நல்லா காரமா, ஒரு மசாலா செஞ்சு சாப்பிடலாமா!!! தேவையான பொருட்கள் : நண்டு - ஒரு கிலோ உருளைக்கிழங்கு - கால் கிலோ வெங்காய… Read More

Popular Posts

Followers