நமது சமையலறை அலமாரியில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கும். அதில் பூண்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.
பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூச்சிக்கடியினால் உண்டான விஷம் பலவீனமடையும்.
பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் தேமல் காணாமல் போய் விடும்.
பூண்டை சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை நசுக்கிப் போட்டு சூப் வைத்துக் கொடுக்கலாம். இந்த சூப் குடித்தால் சளி பிடிப்பது குறையும்.