Wednesday, March 16, 2016

  • March 16, 2016
  • askshrinivas
குடல் புண் பிரச்சனையா…? வாயுக்கோளாறா..?




இதோ இயற்கை தரும் மருந்து..!


இயற்கை நமக்கு கொடுத்துள்ள உணவுகளால் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

இதோ சில இயற்கையான உணவுகளின் பலன்கள்.

தேன்
சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படுத்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப்படுத்தும்.

வெந்தயம்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும்.

துளசி
தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

பூண்டு:
 வயிற்றில் உண்டாகும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.

இளநீர்
உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்களுக்கு சிறந்த பானம்.

வெண்ணெய்
வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும்.

மிளகு
ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.

பாகற்காய்
சர்க்கரை வியாதிக்கு நல்லது. வாய்நாற்றம் போக்கும். வயிற்றுப்பூச்சியை கொல்லும்.

பச்சைபட்டாணி
உடலுக்கு வலிமையும், புத்துணர்ச்சியையும் தரும். குடல் புண்களை ஆற்றும், களைப்பை நீக்கும். 

Popular Posts

Blog Archive

Followers